Friday, March 7, 2008

Aurangzeb exhibit: jihadi opposition and human rights


தீவிரவாத எதிர்ப்பும் மக்கள் உரிமையும்

நான் கடந்த மார்ச் 5ம் தேதி பதிவில், FACT என்கிற தீவிர வாத எதிர்ப்பு அமைப்பு நடத்திய ஒரு கண்காட்சி பற்றி கூறியிருந்தேன். 9ம் தேதி வரை நடை பெறவிருந்த அந்த கண்காட்சியை நேற்று (6ம் தேதி) மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த செய்தி இன்றைய (7ம் தேதி) செய்திதாள்களில் வந்துள்ளது.

விஷயம் இதுதான். இரண்டு அல்லது மூன்று இஸ்லாமியர் சென்னை போலீஸ் கமிஷனரை நேற்று சந்தித்து, இந்த கண்காட்சி நீடித்தால் மதக்கலவரம் ஏற்படும் என்றும் கண்காட்சி மனித உரிமைகளள மீறிவிட்டததகவும் புகார் கொடுத்துள்ளனர். உடனே, போலீஸ் அதிகாரிகளூம் களத்தில் இறங்கி, சில ஓவியங்களை சேதப்படுத்தியும், அதன் அமைப்பாளர்களை (பெண்கள் உட்பட) கைது செய்தும் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

அதன் அமைப்பாளர்கள் நிகழ்ச்சி துவ்ங்கிய 3ம் தேதி, பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கும், கண்காட்சி துவக்க விழாவிற்கும் அழைத்திருந்தார்கள். (பத்திரிகையாளன் என்கிற முறையில் எனக்கும் அழைப்பு வந்தது). அன்றைய தினம் எந்த பத்திரிகையாளர்களுமே, நான் உட்பட, போகவில்லை. மறுநாளும் அந்த நிகழ்ச்சி செய்தியாகவில்லை. நானும் ஒரு பத்திரிகையாளன் என்கிற வகையில், இரண்டு நாட்கள் கழித்து, அந்த சாலையில் செல்லும்போது, கண்காட்சியில் நுழைந்தேன். அதனால் தான் நான் 5ம் தேதி, என்னுடைய பிளாகில் பதிவு செய்தேன். இந்த போலீஸ் தலையீட்டிற்கு பிறகு, இந்த கண்காட்சி உலக அளவில் செய்தி ஆக்கப்பட்டுவிட்டது.

அவுரங்கசீப்பின் அண்ணன் தாரா சுகோ பற்றி மிகவும் உயர்வாக குறிப்பிட்டு இருந்தார்கள். அவர் மற்ற மதத்தினரை மரியாதையுடன் நடத்தினார் என்பதையும் குறிப்பிட்டு இருந்தார்கள். (படம்). மற்றொரு இடத்தில், அவுரங்கசீப் திருகுரான் மீது பற்று வைத்திருந்த்தார் என்றும் தன்னுடைய குல்லாவை அவரே தைத்துகொண்டதையும் விவரித்து இருந்தார்கள்.



நல்ல குடும்பத்தில் பிறந்த பலர், வெறியர்களாக இருந்த வரலாறு நிறைய உண்டு. அந்த அமைப்பாளர்களிடம் பேசும் போது அவர்கள், " அவுரங்கசீப்பிற்கு பதிலாக அவரது அண்ணன் தாரா சுகோவே மன்னராக ஆகியிருந்தால், இந்திய நாட்டின் சரித்திரமே மாறியிருக்கும்' என்றார்கள்.

ஒரு சிலரது போலீஸ் கம்ப்ளெயிண்ட்டினால், இதுவரை பேசப்ப்டாத அவுரங்கசீப்பின் அராஜகம் பற்றிய கண்காட்சி இப்போது பெரிய அளவில் உலக அளவில் விவாதிக்கப்படுகிறது. (இந்த கண்காட்சி அமைப்பாளர்கள், கம்ப்ளெயிண்ட் கொடுததவர்களுக்கு நன்றி செலுத்தவேண்டும்)

"பிரபல ஒவியர், எம். எஃப். ஹுசேன் இந்து கடவுள்களை நிர்வாணமாக ஒவியம் வரைந்து காட்சியில் வைத்திருந்தபோது, மனித உரிமை அமைப்பினர் அது 'ஒவியனின் கலை உரிமை' என்று வாதிட்டனர். அப்போது, அவர்கள் மனதில், கோடிககண்க்கான ஆன்மீகத்தில் நம்பிக்கை உடையவர்களின் மனம் புண்படுவ்தைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால், இந்த அவுரங்கசீப் கண்காட்சியில், மனித உரிமை பறிபோகிவிட்டதாக அவர்கள் வாதிடுவது வியப்பாக இருக்கிறது" என்று இந்து அமைப்பினர் குறை கூறுகின்றனர்.

உலக அளவில் எல்லா மதத்திலும் நல்லவர்களும் உண்டு, தீயவர்களூம் உண்டு. 99.9999999 சதவிகிதத்தினர் நல்லவர்களே. அமைதியானவர்கள். ஒரு சில தீயவர்கள் செய்யும் கொடுமையான செய்கையால், அந்த மதத்தினர் அனனவரையும் குறை கூற முடியாது. அதே சமயம், அனைத்து மதத்தினரும், நல்லவர்களுக்காக வாதாட வேண்டும். தீயவர்களுக்காக வாதாடக்கூடாது.

என்னுடைய நெருங்கிய இஸ்லாமீய நண்பர்கள், (தங்கள் பெயரை வெளியிட விரும்பாமல்), மனம் வருந்தி, ஒரு சிலர், தங்கள் பப்ளிசிடிக்காக, அவுரங்கசீப் போன்ற கொடியவர்களை ஆதரித்து, போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்து, எவருமே அறியாத ஒரு கண்காட்சியை உலக அளவில் செய்தியாக்கி, தங்கள் சமூகத்தை சார்ந்த மற்ற நல்லவர்களூம் வன்முறையை ஆதரிப்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி விட்டார்களே என்று ஆதங்கப்படுகிறார்கள்.


Posted by K. Srinivasan at 4:33 PM

http://vetripadigal.blogspot.com/2008/03/blog-post_07.html

No comments: